நள்ளிரவில் இலவசமாக உணவு வழங்க மறுத்ததால் உணவக மேலாளரைத் தாக்கிய போலீஸ் அதிகாரி

0 2813

மும்பையில், இலவசமாக உணவு வழங்க மறுத்த உணவக மேலாளரைத் தாக்கிய போலீஸ் அதிகாரி மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

புதன்கிழமை நள்ளிரவு, சாண்டா குரூசில் மூடப்பட்டிருந்த ஒரு உணவகத்தின் பின்புறம் வழியாக நுழைந்த காவல் உதவி ஆய்வாளர் விக்ரம் பட்டீல், மேலாளரிடம் உணவு வழங்குமாறு கேட்டுள்ளார்.

உணவகம் மூடப்பட்டுவிட்டதாக கூறியதால் கோபமடைந்த விக்ரம் பட்டீல் கடுமையான சொற்களால் திட்டியபடியே மேலாளரை அடிக்கத் தொடங்கினார். மது போதையில் இருந்த விக்ரம் பட்டீலை அங்கிருந்த ஊழியர்கள் சமாதனப்படுத்த முயற்சித்தனர்.

இருந்தபோதும் ஆத்திரம் தணியாத அதிகாரி, மேலாளரைத் தொடர்ந்து தாக்கினார்.இதுகுறித்த காட்சிகள் வெளியான நிலையில், விக்ரம் பட்டிலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments