ஒமைக்ரான் தொற்று பரவல் அதிகரிப்பதன் எதிரொலி.. சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திரமோடி ஆலோசனை

0 3194

நாட்டில் ஒமைக்ரான் தொற்று பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக பிரதமர் நரேந்திரமோடி ஆலோசனை நடத்தினார்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7 ஆயிரத்து 495 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உருமாறிய ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 300ஐ நெருங்கி இருக்கிறது.

இந்த சூழலில் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவ வல்லுநர்களுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்தினார். தொற்று பரவலை கட்டுப்படுத்த கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கலாமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments