கடும் எதிர்ப்புக்கிடையே, பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் கட்டாய மதமாற்றத் தடைச் சட்ட முன்வரைவு நிறைவேற்றம்

0 2212

கட்டாய மதமாற்றத்தைத் தடை செய்யும் சட்ட முன்வரைவு கர்நாடகச் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. மதச் சுதந்திரத்துக்கான உரிமையைக் காக்கும் சட்டம் என்னும் பெயரிலான முன்வரைவைச் சட்டமன்றத்தில் சட்டத் துறை அமைச்சர் மதுசுவாமி கொண்டுவந்தார்.

பட்டியலினத்தவர், சிறார், பெண்கள் ஆகியோரை வலுக் கட்டாயமாக மதம் மாற்றினால் பத்தாண்டு வரை சிறைத் தண்டனை அளிக்க இந்தச் சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சட்ட முன்வரைவு 2016ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியிலேயே அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டுக் கிடப்பில் போடப்பட்டதாக மதுசுவாமி தெரிவித்தார். அதற்குப் பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா, தாங்கள் கொண்டுவந்த சட்ட முன்வரைவில் இருந்து இது பெரிதும் மாறுபட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

காங்கிரஸ் உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புக்கிடையே சட்ட முன்வரைவு பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments