சிவகார்த்திகேயன் நடித்த அயலான் படத்தை வெளியிட இடைக்காலத் தடை

0 4274

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அயலான் படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில், ஏ.ஆர் ரஹ்மான் இசையில் உருவாகும் இந்த படத்தை 24 ஏ. எம் ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கிறது.

இந்நிலையில், டேக் என்டெர்டெயின்மென்ட் என்ற நிறுவனத்திடம் இருந்து 24 ஏ.எம் ஸ்டுடியோஸ் நிறுவனம் பெற்ற 5 கோடி ரூபாய் கடனை வட்டியுடன் திருப்பி செலுத்தும் வரை படத்தை வெளியிட தடை கோரி அந்நிறுவனம் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், படத்தை ஜனவரி 3 ம் தேதி வரை  வெளியிட இடைக்கால தடை விதித்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments