ஏற்கனவே ரூ.258 கோடி சொத்துக்களை முடக்கிய நிலையில், லாட்டரி அதிபர் மார்ட்டினின் மேலும் ரூ.19.59 கோடி சொத்துக்கள் முடக்கம்

0 3059

சட்டவிரோத பண பரிவர்த்தனைக்காக லாட்டரி அதிபர் மார்ட்டினின் மேலும், 19 கோடியே 59 லட்சம் ரூபாய் மதிப்புடைய சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டு வருமான வரித்துறை லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய 70-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர்.

அதன்படி கடந்த 2009 - 2010 காலகட்டத்தில் சிக்கிம் மாநில லாட்டரி விதிகளை மீறி 910 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியதாகவும், அந்த வருவாயை 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூலம் மாற்றி முதலீடு செய்திருப்பதாக வருமான வரித்துறை குற்றம் சாட்டியது.

அதனடிப்படையில் கேரள மாநிலம் கொச்சி அமலாக்கத்துறை சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்ததாக மார்டின் மற்றும் அவரது பங்குதாரர் ஜெயமுருகன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தது.

அதன்படி, ஏற்கனவே 258 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துக்கள் அமலாக்கத் துறையால் முடக்கப்பட்ட நிலையில் தற்போது 19.59 கோடி மதிப்புடைய சொத்துகளை முடக்கி இருப்பதாக தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments