தனியார் பஞ்சு மில்லில் மின்கசிவு காரணமாக தீ விபத்து..! ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்

0 2006

திருப்பூர் மாவட்டம் வெள்ளக் கோவில் அருகே மின்கசிவு காரணமாக தனியார் பஞ்சு மில் தீ விபத்துக்குள்ளானது.

உப்புப்பாளையம் பகுதியில் இளங்கோ என்பவர் சரோஜினி மில் என்ற பெயரில் பனியன் கழிவுப் பஞ்சுகளை அரைத்து நூல் எடுக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.

இங்குள்ள முதல் குடோனில் மின்கசிவு காரணமாக புகை எழுந்து பஞ்சுகள் தீப்பற்றி எரியத் தொடங்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து 2வது மற்றும் 3வது குடோனிலும் தீப்பற்றியதால் சுமார் 1 கோடி மதிப்பிலான பஞ்சுகளும், இயந்திரங்களும் எரிந்து நாசமானது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments