பட்டப்பகலில் வீட்டில் இருந்த பெண்களை கட்டிப்போட்டு 80 சவரன் நகை, ரூ.5 லட்சம் பணம் கொள்ளை

0 1899

காஞ்சிபுரத்தில் பட்டப்பகலில், ஆடிட்டர் வீட்டுக்குள் புகுந்த 4 பேர் கும்பல் வீட்டில் இருந்த பெண்களை கட்டிப்போட்டுவிட்டு கத்திமுனையில் 80சவரன் நகைகள், 5லட்சம் ரூபாய் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆடிட்டரான மேகநாதன் தனது மனைவி, பிள்ளைகள் மற்றும் தனது இரண்டு சகோதரர்கள் குடும்பத்துடன் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகிறார். மேகநாதனும், அவரது சகோதரர்களும் வேலைக்கு சென்றுவிட்ட நிலையில், வீட்டில் மூன்று பேரின் மனைவிகள் மட்டும் இருந்திருக்கின்றனர்.

இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் 4 பேர், பட்டப்பகலில் திடீரென வீட்டுக்குள் புகுந்து, கத்தியைக் காட்டி மிரட்டியதோடு, அவர்களின் கை, கால்களை கட்டிப்போட்டு நகைகளை கொள்ளையடித்ததாக கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments