அனைத்து துறைகளின் செயல்பாடுகளையும் கண்காணிக்க முதலமைச்சர் அறையிலேயே உருவாக்கப்பட்டுள்ள மின்னணு தகவல் பலகை

தமிழக அரசின் அனைத்து துறைகளின் செயல்பாடுகளையும் முதலமைச்சர் நேரடியாக கண்காணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள மின்னணு தகவல் பலகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கிவைத்து ஆய்வு செய்தார்.
அனைத்து துறை அலுவல்களை நேரடியாக கண்காணிக்கும் வகையில், ''CM Dashboard'' என்ற முதலமைச்சர் மின்னணு தகவல் பலகை உருவாக்கப்பட்டுள்ளது.துறை ரீதியான அறிவிப்புகள், திட்டங்களின் நிலை, நிதி ஒதுக்கீடு புள்ளிவிபரங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு மின்னணு தகவல் பலகையில் பதிவேற்றம் செய்யப்படும்.
இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அறையில் இருந்தவாறே கண்காணித்துக் கொள்ளலாம் எனவும், தகவல் பலகையை கொண்டு வாரம் ஒருமுறை துறை செயலாளர்களுடன் முதலமைச்சர் ஆய்வு கூட்டம் நடத்துவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments