லூதியானா நீதிமன்றத்தில் வெடித்துச் சிதறிய மர்ம பொருள்

0 2975

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானா நீதிமன்றத்தில், பயங்கர சப்தத்துடன் மர்மப் பொருள் வெடித்துச் சிதறிய சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த நீதிமன்றத்தின் 2-வது மாடியில் உள்ள கழிப்பறையில், மதியம் 12.30 மணியளவில் திடீரென வெடிச்சத்தம் கேட்டது.

அப்போது நீதிமன்றத்தின் சுவர்கள் மற்றும் ஜன்னல்கள் சேதமடைந்த நிலையில், அங்கிருந்தவர்களிடையே பீதி நிலவியது. போலீசாரும் தீயணைப்புத்துறையினரும் விரைந்து சென்று, காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வழக்கறிஞர்களின் போராட்டம் காரணமாக, குறைந்த நபர்களே நீதிமன்ற வளாகத்தில் இருந்ததால், பெரிய அளவிலான உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், சில தேசவிரோத சக்திகள் இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளதாகவும், குற்றவாளிகள் தப்ப முடியாது என்றும், பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சிங் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments