அரசியல்வாதிகள், அதிகாரிகளின் உறவினர்கள் ராமர் கோயில் அருகே நிலம் வாங்கியதாக சர்ச்சை.. விசாரணை நடத்த உ.பி., அரசு உத்தரவு..!

0 1887

அயோத்தி ராமர் கோயில் அருகே, அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் உறவினர்கள் நிலம் வாங்கி குவித்ததாக கூறப்படும் புகார் குறித்து விசாரிக்க, உத்தரப்பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.

பாஜகவை சேர்ந்த எம்எல்ஏக்கள், மேயர்கள், மற்றும் ஆணையர், கோட்டாட்சியர், டிஐஜி போன்ற அதிகாரமிக்க பதவிகளில் இருப்பவர்கள், தங்கள் உறவினர்கள் மூலம் அயோத்தியில் நிலம் வாங்கியிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அயோத்தி ராமர் கோயில் நிலம் தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு பின்னர், அவர்கள் இவ்வாறு வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தை ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் விமர்சித்த நிலையில், இதுகுறித்து வருவாய்த்துறை முழுமையாக விசாரித்து அறிக்கை தர முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளதாக, உத்தரப்பிரதேச கூடுதல் தலைமைச் செயலாளர் நவ்நீத் செகல் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments