சேலத்தில் முன்விரோதம் காரணமாக 3 சினை மாடுகளை வெட்டிக் கொன்ற கொடூரம்.! பெண் உட்பட 3 பேர் கைது

0 2884

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே முன்விரோதம் காரணமாக 3 சினை மாடுகளை வெட்டிக் கொன்ற, பெண் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பூசாரிப்பட்டி கிராமத்தை சேர்ந்த லட்சுமிக்கும், ராஜா என்பவரும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. ராஜா ஆட்டு இறைச்சி விற்பனை செய்து வரும் நிலையில், அருகிலுள்ள வீட்டில் வசித்து வரும் மீனாட்சி மாடு வளர்த்து வந்துள்ளார்.

மாட்டு கொட்டகையில் இருந்து வரும் துர்நாற்றத்தால் தனது வியாபாரம் பாதிக்கப்படுவதாக கூறி ராஜா மற்றும் அவரது மனைவி வளர்மதி, மீனாட்சியிடம் அவ்வபோது தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

கடந்த 19-ம் தேதி மீனாட்சி வெளியூர் சென்ற நிலையில், அவர் வளர்த்து வந்த 4 சினை மாடுகளையும் சுடுகாட்டு பகுதிக்கு கடத்தி சென்ற வளர்மதி மற்றும் அவரது மகன்கள் 2 பேர் ஆடு வெட்டும் கத்தியால் 4 மாடுகளையும் சரமாரியாக வெட்டியுள்ளனர்.

இதில் 3 மாடுகள் உயிரிழந்த நிலையில், 1 மாட்டுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து வளர்மதி மற்றும் மகன்கள் 2 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments