தடை செய்யப்பட்ட ஏர் ஹாரன்களைப் பயன்படுத்திய பேருந்துகளுக்கு தலா ரூ.20,000 அபராதம் விதிப்பு

0 2530

கும்பகோணத்தில் தடை செய்யப்பட்ட ஏர் ஹாரன்களைப் பயன்படுத்தி வந்த 4 பேருந்துகளுக்கு தலா 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதுடன், அந்த ஏர் ஹாரன்கள், அதே பேருந்துகளின் சக்கரத்தில் வைத்து நசுக்கி அழிக்கப்பட்டன.

கும்பகோணம் பேருந்து நிலையத்தில் திடீர் ஆய்வில் ஈடுபட்ட போக்குவரத்துத்துறை அலுவலர்கள் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர்.

அத்துடன் பேருந்தின் பாகங்கள் சரியில்லாமல் இருந்தததையொட்டி மேலும் 4 தனியார் பேருந்துகளின் தகுதி சான்றையும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் ரத்து செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments