நள்ளிரவில் கள்ளச்சாவி போட்டு இருசக்கர வாகனத்தை திருடிய மர்ம நபர்..!

0 1674

கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தை, நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் கள்ளச்சாவி போட்டு திருடிச் சென்ற சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனராக பணியாற்றி வரும் துரைராஜ், சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருக்கிறார். தனது இருசக்கர வாகனத்தை விடுதிக்கு முன்பு நிறுத்திவிட்டுச் சென்ற அவர், மறுநாள் காலை வந்து பார்க்கையில் வாகனம் திருடப்பட்டதை அறிந்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

image

இதையடுத்து விடுதியின் சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்ததில், மர்ம நபர் ஒருவர் கள்ளச்சாவி போட்டு வாகனத்தை திருடிச் சென்ற காட்சிகள் வெளியாகியுள்ளன.

image

image

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments