பெங்களூர் மாநகராட்சியில் தகுதியுடையோர் அனைவருக்கும் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்

0 1921

கர்நாடகா மாநிலம் பெங்களூர் பெருநகர மாநகராட்சியில், தகுதியுடையோர் அனைவருக்கும் 100 சதவிகிதம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சுதாகர் அறிவித்துள்ளார்.

ஒமைக்ரான் வகை கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அதனை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதோடு, தடுப்பூசி போடும் பணியும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கர்நாடகா மாநிலம் பெங்களூரு பெருநகர மாநகராட்சியில் தகுதியுடையோர் அனைவருக்கும் 100சதவீதம் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்திலேயே, 100 விழுக்காடு தடுப்பூசி செலுத்திய மாவட்டமாக பெங்களூர் மாறியிருப்பதாக, சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சுதாகர் தெரிவித்துள்ளார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments