திருச்சி காந்தி மார்க்கெட்டில் உள்ள தேநீர் கடையில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து

0 2335

திருச்சி காந்தி மார்க்கெட்டில் டீக்கடையில் எரிவாயு கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் 5-க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து நாசமானது.

அதிகாலையில் மார்க்கெட்டில் வெளிப்புறத்திலுள்ள டீக்கடையில் சிலிண்டரில் இருந்து கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து எரிந்தது. மளமளவென பற்றிய தீ அருகில் இருந்த கடைகளிலும் பரவிய நிலையில்,சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆயினும் கடையில் வைக்கப்பட்டிருந்த மேசை, நாற்காலிகள், மின் சாதனங்கள் அனைத்தும் தீயில் கருகி நாசமானது.

இதில், டீக்கடையில் டீ அருந்திக் கொண்டிருந்த மாநகராட்சி பெண் ஊழியருக்கும், டீ மாஸ்டருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. முன்னெச்சரிக்கையாக அப்பகுதியில் மின் இணைப்புகள் அனைத்தும் உடனடியாக துண்டிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments