ஒன்றரை கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பூங்கா.. பேருந்து வசதி இல்லாததால், சுற்றுலாப் பயணிகள் வர முடியாத சூழல்.!

0 1920

கன்னியாகுமரி மாவட்டம் திட்டுவிளை அருகே முக்கடல் அணையில் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட அணை பூங்கா, சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடியாக காணப்படுகிறது.

இயற்கை எழில் மிகுந்த பூங்கா-வாக மாற்றப்பட்டாலும், பேருந்து வசதி இல்லாத இப்பகுதியில் சுற்றுலா பயணிகள் வர முடியாத சூழல் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர். மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பூங்கா சிசிடிவியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது தெரியவந்தது.

சிறுத்தை நடமாட்டம் தொடர்பான அச்சத்தை போக்கி, சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வதற்கான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments