ஒமைக்கரான் நோய்த்தொற்றில் இருந்து எந்த நாடும் தப்பி விட்டதாகக் கூற இயலாது - உலக சுகாதார அமைப்பு

0 2049

ஒமைக்ரான் பரவல் வேகம் எடுத்துள்ள நிலையில் எந்த நாடும் நோய்த்தொற்றில் இருந்து தப்பி விட்டதாகக் கூற இயலாது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களைத் தான் மருத்துவமனையில் அனுமதிக்கக் கூடிய அளவில் தீவிரமாக தொற்று பாதிப்பதாகவும் மரணங்கள் நேர்வதாகவும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியஸ் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ள நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நோய்த் தொற்றின் தீவிரத்தைக் குறைக்க உலக நாடுகள் தடுப்பூசி செலுத்துவதையும் பூஸ்டர் டோஸ் செலுத்துவதையும் பற்றி தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். ஓமைக்ரான் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவத் துறையினர் மருத்துவ முகக்கவசத்தை அணியுமாறும் உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments