திருப்பதியில் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் நாளை ஆன்லைனில் வெளியீடு

0 36107

ஜனவரி மாதத்தில் திருப்பதி ஏழுமலையானை சிறப்பு தரிசனம் செய்வதற்கான டிக்கெட்டுகள் நாளை முதல் ஆன்லைனில் வெளியிடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

பத்து நாட்கள் நடைபெறவிருக்கும் வைகுண்ட ஏகாதசியில், பக்தர்களுக்கான சொர்க்க வாசல் மற்றும் 300 ரூபாய் சிறப்பு தரிசனம் டிக்கெட்டுகள் நாளொன்றுக்கு 20 ஆயிரம் டிக்கெட்டுகளும், மற்ற நாட்களில் 12 ஆயிரம் டிக்கெட்டுகளும் வெளியிட உள்ளதாக தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் காலை 9 மணி முதல் தேவஸ்தான இணையதளமான https://tirupatibalaji.ap.gov.in/#/login மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments