அதிகரிக்கும் ஒமைக்ரான்.. பிரதமர் அவசர ஆலோசனை.!

0 2150

இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை நடத்துகிறார்.

நாடு முழுவதும் ஒமைக்ரான் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி 213 பேர் பாதிக்கப்பட்டதாகவும் இதில் 90 பேர் குணமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் 57 பேருக்கும், மகாராஷ்டிராவில் 54 பேருக்கும் ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளது. வரும் வாரங்களில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல், அந்தந்த மாநிலங்களில் உள்ள விடுமுறை கொண்டாட்டங்கள் வர இருப்பதால் பரவல் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்பதை கருத்தில் கொண்டு தேவைக்கேற்ப இரவு நேர ஊரடங்கு, உள்ளிட்ட கட்டுப்பாடுகளை அமல்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம் எழுதியுள்ளது.

பரிசோதனையில் 10 சதவீதம் பாசிட்டிவ் இருந்தால், இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாம் எனவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் பரவலை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments