ஹெலிகாப்டர் விபத்து - 12 மணி நேரம் கடலில் நீந்தி உயிர்பிழைத்த மடகாஸ்கர் அமைச்சர்

0 2923

ப்பிரிக்க நாடான மடகாஸ்கரில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில், அதில் பயணித்த அந்நாட்டு அமைச்சர் ஒருவர் 12 மணி நேரம் கடலில் நீந்தி உயிர்பிழைத்துள்ளார்.

அந்நாட்டின் வடகிழக்கு பகுதியில் சட்டவிரோதமாக பயணிகளை ஏற்றிச் சென்ற சரக்கு கப்பல் கவிழ்ந்த விபத்தில், 64 பேர் உயிரிழந்தனர். மேலும், 20க்கும் மேற்பட்டோர் மாயமாகினர்.

இந்நிலையில், இந்த விபத்து நிகழ்ந்த இடத்தை பார்வையிட அந்நாட்டின் அமைச்சர் செர்ஜி கெல்லே ஹெலிகாப்டரில் சென்றபோது திடீரென அது விபத்துக்குள்ளானது.

இதனை அடுத்து, ஹெலிகாப்டரின் இருக்கையை படகு போல பயன்படுத்தி கடலில் நீந்தி அவர் கரையை அடைந்துள்ளார். இது குறித்து பேசிய அமைச்சர், தான் மரணமடையும் நேரம் இன்னும் வரவில்லை என குறிப்பிட்டுள்ளார். a

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments