உப்பள வாடகை உயர்வை ரத்துசெய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு.. மத்திய அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது -நீதிபதி

0 1534

உப்பளங்களுக்கான வாடகையை மத்திய அரசு உயர்த்தியதை ரத்து செய்யச் சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மத்திய அரசுக்குச் சொந்தமான உப்பளங்கள், உப்பு உற்பத்தியாளர்களுக்குக் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.

இந்த நிலங்களுக்கான ஒதுக்கீட்டுக் கட்டணத்தை ஏக்கருக்கு 100 ரூபாயாகவும், வாடகையை ஏக்கருக்கு 120 ரூபாயாகவும் 2013ஆம் ஆண்டு மத்திய அரசு உயர்த்தியது. இதை எதிர்த்துத் தூத்துக்குடி உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் உள்ளிட்டோர் சார்பில் வழக்குகள் தொடுக்கப்பட்டன.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியம், பொது நலனைக் கருத்திற் கொண்டு எடுக்கப்பட்ட மத்திய அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது எனக் கூறி வழக்குகளைத் தள்ளுபடி செய்தார்.

20 ஆண்டுக் குத்தகைக் காலம் முடிந்து விட்டதால், உரிமம் எடுத்தவர்கள் நிலத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்றும், மீண்டும் குத்தகைக்கு டெண்டர் விடும் போது அதில் மனுதாரர்கள் பங்கேற்கலாம் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments