செஞ்சி அருகே தரைப்பாலத்தில் ஏற்பட்ட பள்ளத்தில் சிக்கி அரசுப்பேருந்து விபத்து

0 2425

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சேதமடைந்த தரைப்பாலத்தில் பயணித்த அரசுப்பேருந்து விபத்துக்குள்ளானது.

செவலபுரை கிராமத்திலிருந்து மேலச்சேரி செல்லும் சாலையில், வராகநதியின் இடையே உள்ள தரைப்பாலம், கடந்த மாதம் ஆற்றில் சென்ற வெள்ளத்தால் சேதமடைந்திருந்தது. இதைத்தொடர்ந்து, கடந்த சில நாட்களாக பாலத்தின் வழியே போக்குவரத்து தொடங்கப்பட்ட நிலையில், பாலத்தின் மையப்பகுதியில் பேருந்து சென்றபோது, பள்ளம் ஏற்பட்டு பேருந்தின் முன்சக்கரம் சிக்கியது.

இதில் பேருந்தில் பயணித்த அனைவருக்கும் சிறுகாயமேதும் ஏற்படாமல் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன. இதனையடுத்து, அப்பகுதி மக்கள் பள்ளம் ஏற்பட்ட பகுதியை முற்றிலுமாக இடித்து அப்புறப்படுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments