உடல்நலக்குறைவால் உடல் மெலிந்த இரண்டு யானைகள்... எம்.ஆர்.பாளையத்தில் உள்ள யானைகள் மறுவாழ்வு மையத்தில் சேர்ப்பு

0 1820

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே எம்ஆர்பாளையம் பகுதியில் உள்ள யானைகள் மறுவாழ்வு மையத்திற்கு உடல்நலக்குறைவுடன் உடல் மெலிந்த நிலையில் இரண்டு யானைகள் வந்துள்ளன.

பொள்ளாச்சி வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் தனியாரால் வளர்க்கப்பட்ட ரோகினி என்ற 25 வயதான பெண் யானையும், ராஜபாளையம் பகுதியில் வளர்க்கப்பட்டு வந்த இந்திரா என்ற 60 வயதான பெண் யானையும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உடல் மெலிந்துள்ளன.

இந்நிலையில், யானைகள் மறுவாழ்வு மையத்தில் விடப்பட்டுள்ள அந்த இரண்டு யானைகளின் உடல்நலத்தை மருத்துவக்குழுவினர் கண்காணித்து வருகின்றனர். அந்த மையத்தில் ஏற்கனவே இருக்கும் 6 யானைகளுடன் சேர்த்து, இந்த 2 யானைகளும் பராமரிக்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments