உசிலம்பட்டி அருகே ரயில்வே பாலத்தில் தேங்கியுள்ள நீரில் மூழ்கி தத்தளித்த முதியவர் மீட்பு

0 1626

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ரயில்வே பாலத்தில் தேங்கியுள்ள தண்ணீரை கடக்க முயன்று நீரில் தத்தளித்தவரை காப்பாற்றிய காட்சிகள் வெளியாகியுள்ளன.

கருமாத்தூரிலிருந்து கோவிலங்குளம் செல்லும் வழியில் அமைந்துள்ள ரயில்வே பாலத்தில் மழைநீரோடு, வயல்களிலிருந்து வெளியேறும் நீரும் தேக்கமடைந்ததால் அவ்வழியே செல்லும் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

இந்நிலையில், விவசாய பணிகளுக்கு செல்ல பாலத்தில் தேங்கியிருந்த தண்ணீரை கடக்க முற்பட்ட முதியவர் ஒருவர், தண்ணீரில் மூழ்கி மூழ்கி எழுந்து தத்தளித்துள்ளார். இதைக்கண்டு உடனடியாக விரைந்த அருகிலிருந்தவர்கள் அவரை பத்திரமாக மீட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments