கேரளாவில் மேலும் 9 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி

0 2395

கேரளாவில் மேலும் 9 பேருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர்  வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து கேரளாவின் எர்ணாகுளம் வந்த 6 பேருக்கும், திருவனந்தபுரம் வந்த 3 பேருக்கும் ஒமைக்ரான் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் இரண்டு பேர் இங்கிலாந்தில் இருந்தும், 2 பேர் தான்சானியா நாட்டில் இருந்தும், கானா மற்றும் அயர்லாந்தில் இருந்தும் வந்தவர்கள்.

இதேபோல் திருவனந்தபுரத்தில் ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்ட 3 பேரும் நைஜீரியா நாட்டில்  இருந்து வந்தவர்கள் என்றும் அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ்  தெரிவித்துள்ளார். இதன் மூலம் கேரளாவில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24 -ஆக உயர்ந்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments