கட்டிடம் இடிந்து விழுந்து உயிரிழந்த தலைமைக் காவலர்.. 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் உடல் தகனம்

0 2195

மதுரையில் கட்டிட விபத்தில் உயிரிழந்த தலைமைக் காவலர் சரவணனின் உடல் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது.

மதுரை கீழவெளி வீதியில் பாழடைந்த கட்டடம் திடீரென இடிந்து விழுந்ததில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தலைமைக் காவலர் சரவணன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு தலைமைக் காவலர் கண்ணன் காயமடைந்தார்.

இந்நிலையில், மதுரையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த சரவணன் உடலுக்கு, அமைச்சர் மூர்த்தி, டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

இதனை அடுத்து, தத்தனேரி மின் மயானத்தில் துப்பாக்கிக் குண்டுகள் முழங்க தலைமை காவலர் சரவணனின் உடல் தகனம் செய்யப்பட்டது.

உயிரிழந்த தலைமைக் காவலர் சரவணன் குடும்பத்துக்கு 25 லட்சம் ரூபாய் நிவாரணமும், அவர் மனைவிக்கு அரசுப் பணியும் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கடந்தாண்டு அந்த கட்டடத்தை அகற்றக்கோரி மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பிய நிலையில், விதிமீறி அவை செயல்பட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments