திடீரென குறுக்கிட்ட இருசக்கர வாகனத்தின் மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த கார் : சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது மோதி ஒருவர் பலி

0 1638

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே திடீரென குறுக்கிட்ட இருசக்கர வாகனம் மீது மோதிய கார், கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீதும் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.

தூங்கனாம் பட்டியைச் சேர்ந்த அஜித், தனபால் ஆகியோர் மகிந்திரா மராஸோ காரில் ஓடைப்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தனர். சீத்தமரம் நான்குமுனை சாலை அருகே மற்றொரு திசையிலிருந்து அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் கார் மீது மோதியது.

அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் நின்றிருந்த 5க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மீது மோதியது. தொடர்ந்து அங்கிருந்த தள்ளுவண்டியின் மீதும் மோதி நின்றது.

இதில் சாலையோரம் நின்றிருந்தவர்கள், பைக்கில் வந்த நபர் உட்பட 5 பேர் படுகாயமடைந்த நிலையில், அவர்களில் மூர்த்தி என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். காரை ஓட்டி வந்தவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரித்து வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments