நமக்கு பிரியாணி தான் எப்போதும்... உணவுப் பிரியர்களின் ஃபேவரைட் ... சிக்கன் பிரியாணி முதலிடம் - ஸ்விக்கி தகவல்

0 2566

தொடர்ந்து 6ஆவது ஆண்டாக உணவுப் பிரியர்களின் அதிக விருப்பத்திற்குரிய உணவுப் பட்டியலில் சிக்கன் பிரியாணி முதலிடத்தை பிடித்திருப்பதாக ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் நடப்பு ஆண்டில் மட்டும் 6 கோடியே 4 லட்சத்து 44 ஆயிரம் சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சராசரியாக ஒரு நிமிடத்திற்கு 115 ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒரு நிமிடத்திற்கு 90 சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

சென்னை, ஹைதராபாத், லக்னோ, கொல்கத்தாவில் அதிகம் பேர் சிக்கன் பிரியாணியை ஆர்டர் செய்துள்ளனர். ஆனால் மும்பையில், தால் கிச்சடியை அதிகம் பேர் ஆர்டர் செய்துள்ளதாக ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments