நிர்வாணமாக சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபருக்கு, ஆடை அணிவித்து உணவு வாங்கி கொடுத்து சாப்பிட வைத்த பெண்

0 2659

நெல்லையில் நிர்வாணமாக சாலையில் சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபருக்கு, பெண் ஒருவர் ஆடை அணிவித்து உணவு வாங்கிக் கொடுத்த சம்பவம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கங்கை கொண்டான் பைபாஸ் சாலையில் ஒருவர் நிர்வாணமாக நடந்து வந்துகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளம்பெண் ஒருவர் அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதை உணர்ந்து தனது பைக்கில் இருந்த துணியை எடுத்து அந்த நபருக்கு அணிவித்தார். பின்னர் பிஸ்கட் மற்றும் பழங்கள் வாங்கி வந்து அவரிடம் கொடுத்து சாப்பிட வைத்தார்.

மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் நிர்வாணமாக சாலையில் சுற்றித்திரிந்ததை பலரும் வேடிக்கை பார்த்த நிலையில், சகோதர மனப்பான்மையுடன் ஆடை அணிவித்து உணவு வழங்கிய மனிதநேயம் நிறைந்த இளம்பெண்ணை, பலரும் பாராட்டி, வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments