தமிழகத்தில் வருகிற 26-ம் தேதி வரை பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் - வானிலை ஆய்வு மையம்

தமிழகம் மற்றும் புதுவையில் வருகிற 26-ம் தேதி வரை பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பு வெப்பநிலையை ஒட்டியே காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் தெளிவாக காணப்படும் எனவும், அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Comments