ஆந்திராவில் மேலும் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு

0 1723

கென்யா நாட்டில் இருந்து சென்னை வழியாக ஆந்திராவிற்கு சென்ற பெண்ணுக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெரிவித்த ஆந்திர சுகாதாரத்துறை, கடந்த 10ஆம் தேதி கென்யாவில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த 39 வயது பெண், சாலை மார்க்கமாக திருப்பதிக்கு வந்ததாக தெரிவித்துள்ளது. திருப்பதியில் அந்த பெண்ணிற்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதை அடுத்து, நடத்தப்பட்ட மரபியல் பகுப்பாய்வு சோதனையில் ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவர் நல்ல உடல்நிலையுடன் உள்ளதாகவும், அவரது குடும்ப உறுப்பினர்கள் 6 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் இதுவரை 2 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments