அரசுப் பள்ளி வளாகத்தில் 11 வயது சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்ட விவகாரம்... சிறுமிக்கு நீதி கிடைக்க வேண்டும் என கூறி 200க்கும் மேற்பட்டோர் மறியல்

0 2238

கொடைக்கானலில் பள்ளி வளாகத்தில் சிறுமியின் எரிந்த நிலையிலான சடலம் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில், சிறுமிக்கு நீதி கிடைக்க வேண்டும் என கூறி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பாச்சலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கடந்த 15ஆம் தேதி 5 ஆம் வகுப்பு சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்ட நிலையில், இதுவரை குற்றவாளி கண்டுபிடிக்கபடவில்லை. இந்நிலையில், 3 வது நாளாக குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், 200க்கும் மேற்பட்டோர் வத்தலக்குண்டு மலைச்சாலை ஏரிச்சாலை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்ட நிலையில் தகவலறிந்து வந்த போலீசார் மக்களை அப்புறப்படுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments