இரவுநேரத்தில் நிலவும் கடுங்குளிர்: உயிரினங்களைக் கதகதப்பாக வைத்திருக்க வெப்பமூட்டி!

0 1394

உத்தரப்பிரதேசத்தில் இரவுநேரத்தில் கடுங்குளிர் நிலவுவதால் லக்னோ உயிரியல் பூங்காவில் உள்ள உயிரினங்களுக்கு வெப்பமூட்டி வசதி செய்யப்பட்டுள்ளது.

ராஜஸ்தான், பஞ்சாப், டெல்லி, அரியானா, உத்தரப்பிரதேச மாநிலங்களில் இரு வாரங்களாகக் கடுங்குளிர் நிலவி வருகிறது. இந்நிலையில் லக்னோ உயிரியல் பூங்காவில் வெப்பமூட்டிகளைப் பயன்படுத்தி உயிரினங்களுக்குக் கதகதப்பான சூழலை உருவாக்கிக் கொடுத்துள்ளனர்.

குளிர்காலச் சூழலுக்கு ஏற்றபடி உயிரினங்களுக்கு அதிக ஊட்டச் சத்துள்ள உணவுகள் வழங்கப்பட்டு வருவதாகப் பூங்கா துணை இயக்குநர் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments