புதுக்கோட்டையில் கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்ததாக 2 காவலர்கள் பணியிடை நீக்கம்

0 1687

புதுக்கோட்டையில் கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்ததாக கூறி, காவல் உதவி ஆய்வாளர் மற்றும் தலைமை காவலர் ஆகியோர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான்மசாலா உள்ளிட்ட பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்த நபர்களை அண்மையில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களது செல்போன்களை ஆய்வு செய்ததில், புதுக்கோட்டை நகர காவல்நிலைய உதவி ஆய்வாளர் சந்திரசேகர் மற்றும் திருப்புனவாசல் தலைமை காவலர் முத்துக்குமார் ஆகிய இருவரும் அவர்களுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, இரண்டு காவலர்களையும் பணியிடைநீக்கம் செய்து திருச்சி சரக டிஐஜி சரண் சுந்தர் உத்தரவிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments