மியான்மர் சுரங்க விபத்து - 70 பேர் கதி என்ன.?

0 2200

வடக்கு மியான்மரில் உள்ள பச்சைக்கல் மாணிக்கம் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட மண் சரிவில் 70 சுரங்க ஊழியர்கள் மாயமாகியுள்ளதாகவும் ஒருவர் பலியானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Kachin மாநிலத்தின் Hpakant பகுதியில் விபத்துக்குள்ளான  சுரங்கத்தில் சிக்கியுள்ள சுமார் 100 பேர் சட்டவிரோதமாக  சுரங்க வேலையில் ஈடுபட்டர்வர்கள் என கூறப்படுகிறது. இந்நிலையில், விபத்தில் சிக்கி காயமடைந்த 25 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

200-க்கும் மேற்பட்ட மீட்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், சுரங்கத்துக்கு அருகே உள்ள குளத்தில் படகுகள் மூலம் இறந்தவர்களை தேடும் பணியும் நடந்து வருவதாக மீட்பு குழு தலைவர் தெரிவித்துள்ளார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments