ஒமிக்ரான் பரவல் அதிகரிப்பால் 50 கோடி பேருக்கு இலவசமாக கொரோனா ரேபிட் பரிசோதனை ; அதிபர் ஜோ பைடன்

0 1469
ஒமிக்ரான் பரவல் அதிகரிப்பால் 50 கோடி பேருக்கு இலவசமாக கொரோனா ரேபிட் பரிசோதனை

அமெரிக்காவில் ஒரேவாரத்தில் ஒமிக்ரான் பரவல் பல மடங்கு அதிகரித்து விட்டதையடுத்து சுமார் 50 கோடி பேருக்கு இலவசமாக கொரோனா ரேபிட் பரிசோதனை நடத்த இருப்பதாக அதிபர் ஜோ பைடன் அதிரடியாக அறிவித்துள்ளார்.

கொரோனா பாதித்தவர்களில் 73 சதவீதம் பேர் ஒமிக்ரான் பாதிப்புக்கு ஆளாகியிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் அமெரிக்காவில் பாதுகாப்பு படைகள் குவிக்கப்பட்டு மக்கள் கூட்டமாக கூடும் இடங்களில் கலைந்து போகும்படி அறிவுறுத்தி வருகின்றனர்.

மருத்துவமனைகளில் நோயாளிகளின் கூட்டம் அலைமோதுகிறது. இன்னொருபுறம் தடுப்பூசி மற்றும் பூஸ்டர் ஊசிகளுக்கான நடவடிக்கைகளும் தீவிரம் அடைந்துள்ளன. இந்நிலையில் தமது பனிக்கால கோவிட் தடுப்புத் திட்டங்களில் பல்வேறு அதிரடி மாற்றங்களை ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பான விளக்கத்தை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது.புதிய ஒரு இணைய தளம் மூலமாக புதிதாக 50 கோடி பேருக்கு இலவசமாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அவர்களின் விவரங்கள் அதில் பதிவு செய்யப்படுவதுடன் அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments