15 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்த விவகாரம்; சிறுமியின் தாயும் தாயின் ஆண் நண்பரும் போக்சோவில் கைது..!

0 4242

சென்னையில் 15 வயது சிறுமிக்குப் பெண் குழந்தை பிறந்த சம்பவத்தில் அவருடைய தாயும் தாயின் ஆண் நண்பரும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் துரைராஜ் என்பவனுக்கும் தவறான தொடர்பு இருந்துள்ளது. அந்தப் பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்ற துரைராஜ், அவரது 15 மகளையும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி இருக்கிறான்.

இதில் அந்த சிறுமி கர்ப்பமான நிலையில், எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து மருத்துவமனை சார்பில் அளித்த தகவலின் பேரில் சிறுமியின் தாயையும் துரைராஜையும் போலீசார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments