மாநிலங்களவையிலும் நிறைவேறியது தேர்தல் சீர்திருத்த சட்ட மசோதா.!

மக்களவையில் நிறைவேற்றப்பட்ட தேர்தல் சீர்திருத்த சட்ட மசோதா, மாநிலங்களவையிலும் நிறைவேறியது. ஒருவரின் பெயர் பல இடங்களில் வாக்காளர் பட்டியலில் இருப்பதை தடுக்கும் வகையில் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கவும், வாக்காளராக பதிவு செய்வதற்கு 4 தகுதி நாட்களை நிர்ணயிக்கவும் இந்த மசோதா வழிவகை செய்கிறது.
மேலும், வெளியூரில் உள்ள ராணுவ அதிகாரிகளுக்கு பதில் அவரின் வாழ்க்கைத் துணைவர் தேர்தலில் வாக்களிக்கும் வகைசெய்யவும் மசோதா கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்திருத்த மசோதா எதிர்க்கட்சிகளின் அமளிக்கு இடையே குரல் வாக்கெடுப்பில் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டடது.
இதனிடையே, பெண்ணின் திருமண வயதை 18-இல் இருந்து 21ஆக உயர்த்தும் சட்ட மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை அடுத்து அந்த மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டது.
Comments