வருமான வரி சோதனை.. ஜெயப்பிரியா சிட்பண்ட் நிறுவனத்தில் கணக்கில் காட்டாத ரூ. 250 கோடி மதிப்பிலான சொத்துக்கள் கண்டுபிடிப்பு.!

0 2740

கடலூர் மாவட்டம் நெய்வேலி ஜெயப்ரியா நிதி நிறுவனம் தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற வருமான வரி சோதனையில் கணக்கில் வராத 12 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வருமான வரித்துறை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 16ஆம் தேதி நெய்வேலி, சென்னை, கோவை, நீலகிரி உள்ளிட்ட 30 இடங்களில் சோதனை நடத்தப்பட்டதில் பல்வேறு ஆவணங்களும், டிஜிட்டல் ஆதாரங்களும் கைப்பற்றப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஆவணங்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் நிதி நிறுவனத்தின் மூலம் பெற்ற வருவாய் மறைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,கணக்கில் காட்டப்படாத பணத்தின் மூலம் ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்யப்பட்டு சுமார் 250 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துக்கள் வாங்கப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments