சென்னையில் தனியார் மருத்துவ ஆய்வகத்தில் வேலை செய்யும் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.!

0 6717

சென்னையில் ஒரே தனியார் மருத்துவ ஆய்வகத்தில் வேலை செய்யும் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பூந்தமல்லி நெடுஞ்சாலையில், தாஸ் பிரகாஸ் பகுதியில் இயங்கி வரும் Hitech lab எனும் மருத்துவ ஆய்வகத்தின் கிளைக்கு கடந்த 14 ஆம் தேதி மும்பையிலிருந்து வந்துச் சென்ற உயர் அலுவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து அவருடன் நேரடி தொடர்பில் இருந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தொற்று பாதித்த 12 பேருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments