ஆட்டுகுட்டிக்கு பாலூட்டி வளர்க்கும் தா(நா)ய்..! அதிசயிக்கும் மக்கள்

0 2791

கோவில்பட்டி அருகே தாயில்லா ஆட்டுக்குட்டிக்கு தாயாக மாறிய நாய், பால் கொடுப்பதை கிராம மக்கள் ஆர்வமாக பார்த்து செல்கிறார்கள்.

வானரமுட்டி கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் சாமி என்பவர் வீட்டில் கடந்த ஒன்றரை வருடகாலமாக கிட்டியம்மாள் என்ற பெண் நாயை வளர்த்து வருகிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன் கிட்டியம்மாள் ஈன்ற 6 குட்டிகளையும் பலரும் வாங்கிச் சென்றனர். இந்நிலையில், பெருமாள்சாமியின் தமது மகள் வீட்டில் ஆடு ஈன்ற குட்டிகளில் ஒன்றை தமது வீட்டுக்கு கொண்டு வந்தார்.

ஏற்கனவே குட்டிகளை பிரிந்திருந்த நாய், ஆட்டுக்குட்டியை தனது குட்டி போல பாவித்து பால் கொடுத்து வருகிறது. நாயின் இந்த தாய் அன்பு கிராமத்தினரை அதிசயமாக பார்க்க வைத்துள்ளது.

 image

image

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments