திருச்சியில் தொடர்ந்து இருசக்கரவாகன திருட்டில் ஈடுபட்டுவந்த திருடனை கையும் களவுமாக பிடித்த காவல்துறையினர்.!

0 5030

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியில் தொடர்ந்து இருசக்கரவாகன திருட்டில் ஈடுபட்டுவந்த திருடனை காவல்துறையினர் கையும் களவுமாக கைது செய்தனர்.

கல்லணை பிரிவு சாலையில், வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த திருவெறும்பூர் குற்றப்பிரிவு காவல்துறையினர், சந்தேகப்படும் படியான நபரை மடக்கி விசாரித்ததில் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார்.

இதை தொடர்ந்து, அந்நபரை காவல்நிலையத்தில் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில், துவாக்குடி, மணிகண்டம், லால்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 27 வாகனங்களை திருடியுள்ள ஜான்பாஷா என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவன்மீது வழக்கு பதிந்து,அவனடமிருந்த திருட்டு வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments