சென்னையில் குடிபோதையில் காவலரின் கையைக் கடித்த வழக்கறிஞர் கைது.!

0 2096

சென்னை கொடுங்கையூரில் குடிபோதையில் காவலரின் கையைக் கடித்ததாகக் கூறப்படும் வழக்கறிஞர் கைது செய்யப்பட்டார்.

தண்டையார்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள ஒரு பேக்கரியில் குடிபோதையில் ஒருவர் தகராறில் ஈடுபடுவதாக கொடுங்கையூர் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. அங்கு சென்ற காவலர்களை அந்த நபர் தகாத சொற்களால் பேசி, தாக்கினார் என்று கூறப்படுகிறது.

பொதுமக்கள் உதவியுடன் அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தபோது, வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் சுரேஷ்குமார் என்பது தெரியவந்தது.

சுரேஷ்குமாரை மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்ல முற்பட்டபோது தகராறில் ஈடுபட்ட அவர், காவலர் பாபு என்பவரின் கையைப் பிடித்துக் கடித்துவிட்டார் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments