மலேசியாவில் தொடரும் கனமழையால் 50,000-க்கும் மேற்பட்டவர்கள் வீடுகளை விட்டு வெளியேற்றம்

0 2212

மலேசியாவில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவில் பெய்த கனமழை காரணமாக 50,000-க்கும் மேற்பட்டவர்கள் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர்.

அந்நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் அளவுக்கு அதிகமாகக் கனமழை பெய்து வருகிறது. இதில் 8 மாகாணங்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும், அதிக மக்கள் வசிக்கும் பகுதியாகவும் அந்நாட்டின் பணக்கார மாநிலமாகவும் கருதப்படும் சிலாங்கூரில் தான் மிக மோசமான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதே போல பஹாங் மாநிலமும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு வசித்த 34,000-க்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

சிலாங்கூர் மாநிலத்தில் இருந்து 24,000 க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments