தமிழக மீனவர்களை மீட்கும் நடவடிக்கையை தொடங்கிய மத்திய அரசு..!

0 1824

இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்த மீனவர்களை விடுவிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி வெளியிட்ட அறிக்கையில், கடந்த 18ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை 10 படகுகளுடன் 68 மீனவர்கள் பிடிக்கப்பட்ட நிலையில், அவர்களை விரைவில் மீட்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், யாழ்பாணத்தில் உள்ள தூதரக அதிகாரிகள் மீனவர்களை நேரில் சந்தித்து, அவர்களுக்கான உணவு, உடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைப்பது உறுதிசெய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உடல் நலமின்றி மருத்துவமனையில் உள்ள ஒரு மீனவரையும் தூதர் நலம் விசாரித்ததாக தெரிவித்த அரிந்தம் பக்சி, தமிழக முதலமைச்சர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் மீனவர்கள் விடுதலை தொடர்பாக கோரிக்கை வைத்ததாக கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments