பிறந்து 2 நாட்களேயான ஆண் குழந்தை உயிரிழப்பு..! தவறான சிகிச்சையால் குழந்தை இறந்துவிட்டதாகக் கூறி மருத்துவமனை கண்ணாடிகளை அடித்து நொறுக்கிய உறவினர்கள்

0 1826

ஈரோடு அரசு மருத்துவமனையில் பிறந்து இரண்டு நாட்களேயான ஆண் குழந்தை தவறான சிகிச்சையால் உயிரிழந்துவிட்டதாக கூறி, உறவினர்கள் மருத்துவமனை கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.

ஆட்டையாம்பாளையத்தை சேர்ந்த சம்பத் என்பவரது மனைவி மங்கையர்கரசிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இன்று காலை குழந்தையை பரிசோதிக்க வேண்டுமெனக் கூறி செவிலியர்கள் குழந்தையை வாங்கிச் சென்றுள்ளனர். இரண்டு மணி நேரத்திற்கு மேலாகியும் குழந்தையை கொண்டு வராததால் மங்கையர்கரசி விசாரித்த போது, குழந்தை பால் கொடுக்கும் போதே புரை ஏறி மூச்சுதிணறல் ஏற்பட்டு உயிரிழந்துவிட்டதாகவும் பரிசோதனைக்கு பிறகே குழந்தை இறந்தது தெரியவந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், குழந்தையின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments