அமெரிக்காவில், ஒரு வாரத்துக்குள் 3 சதவீதத்தில் இருந்து 73 சதவீதமாக அதிகரித்த "ஒமைக்ரான்" தொற்று பாதிப்பு

அமெரிக்காவில், ஒரு வாரத்துக்குள், ஒமைக்ரான் வகை கொரோனா பரவல் 3 சதவீதத்தில் இருந்து 73 சதவீதமாக அதிகரித்துள்ளது.
கடந்த வாரம் வரை பெரும்பாலானோர் டெல்டா வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பாதிக்கப்படுவோரில் 73 சதவீதம் பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அதிலும் நியூ யார்க் மற்றும் நியூ ஜெர்சியில் ஒமைக்ரான் பாதிப்பு 92 சதவீதமாகவும், வாஷிங்டனில் 96 சதவீதமாகவும் உள்ளது. ஒமைக்ரானால் பாதிக்கப்படுவோருக்கு கடுமையான கொரோனா அறிகுறிகள் இல்லாத போதும், நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தால் மருத்துவமனைகள் நிரம்பி வழியக்கூடும் என அதிகாரிகள் அச்சமடைந்துள்ளனர்.
எனவே மக்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு அரசு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Comments