இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 200-ஐ தாண்டியுள்ளது ; மத்திய சுகாதாரத்துறை

0 2753
இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 200-ஐ தாண்டியுள்ளது

இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 200-ஐ தாண்டியுள்ளதாக, மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 77 பேர் குணமடைந்து சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒமைக்ரான் பாதிப்பு உலகளவில் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் டெல்லி மற்றும் மகாராஷ்டிராவில் தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த இரு மாநிலங்களிலும் 54 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கடுத்து தெலங்கானா, கர்நாடகா, ராஜஸ்தான் மாநிலங்களில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக, மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளின் மொட்டைமாடியில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments