வீட்டில் தனியாக இருந்த மூதாட்டிக்கு பாயாசத்தில் மயக்க மருந்து கொடுத்து கொள்ளை!

0 2674

சென்னை ராயபுரத்தில் வீட்டில் தனியாக இருந்த 85 வயது மூதாட்டிக்கு பாயாசத்தில் மயக்க மருந்தை கலந்துக் கொடுத்து நகையை கொள்ளையடித்துச் சென்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

கனகம்பாள் என்ற அந்த மூதாட்டி கோவிலுக்கு செல்லும் போது பத்மாவதி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 7-ந் தேதியன்று வீட்டில் இருந்த மூதாட்டியை கோவிலுக்கு வருமாறு அழைத்த பத்மாவதி, தனக்கு திருமணநாள் எனவும், ஆசிர்வதிக்குமாறும் கூறி பாயாசம் கொடுத்திருக்கிறார்.

பாயாசத்தை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே மூதாட்டி மயங்கி விழுந்து விடவே, மூதாட்டியின் கழுத்தில் கிடந்த 5 சவரன் செயின், வளையலை கழட்டிக் கொண்டு தப்பியோடிவிட்டார் பத்மாவதி. சிசிடிவியில் பத்மாவதி பாயாசத்தை பையில் வைத்து கொண்டு வந்த காட்சிகள் பதிவான நிலையில், தொடர்ந்து 50 சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அவரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் உடல்நலம் குன்றியிருக்கும் கணவனுக்காக தனது நகைகள் அனைத்தையும் அடகு வைத்து விட்டதாகவும், அடகு வைத்த நகையை திருப்புவதற்காக திருட்டில் ஈடுபட்டதாகவும் பத்மாவதி வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments