சென்னையில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்டு வந்த முன்னாள் அரசு ஊழியர் கைது

0 2184

சென்னையை அடுத்த ஆவடியில் இருசக்கர வாகனங்களை குறிவைத்து தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த முன்னாள் அரசு ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

அவனிடம் இருந்து 11 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆவடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் திருடப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வந்த நிலையில், தனிப்படை போலீசார் அப்பகுதிகளில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் ஒரே நபர் பைக்குகளை திருடியது தெரியவந்தது.

இந்த நிலையில், ஆவடி - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது தமிழ்ச்செல்வன் என்ற அந்த பைக் கொள்ளையன் சிக்கினான். அவசரத்தில் இருசக்கர வாகனத்தில் சாவியுடன் விட்டுச் செல்பவர்களது பைக்கை குறிவைத்து தான் திருடியதாக தமிழ்ச்செல்வன் ஒப்புக் கொண்டான்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments